அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்

வந்தவாசியில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் காணொலி மூலம் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

Update: 2024-02-26 01:56 GMT

வந்தவாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிகளை துவக்கி வைத்த அம்பேத்குமார் எம்எல்ஏ

வந்தவாசி அரசு மருத்துவமனையில் மாநில நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 கோடியில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் பூமி பூஜை விழா நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், மேலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க இயக்குனர் தரணி வேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் பூமி செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

அப்போது எம்எல்ஏ அம்பேத்குமார் பேசுகையில் கடந்த திமுக ஆட்சியின் போது தான் இங்கு தற்போது இயங்கும் புற நோயாளிகள் பிரசவ பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.

அதன் பிறகு தற்போது தான் இதே திமுக ஆட்சியில் தான் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தற்போது முதல்வர் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்துள்ளார்.

இந்த வந்தவாசி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வந்தவாசி தொகுதி திமுக ஆட்சிக்கு வந்தால் தான் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வந்தவாசி நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணி அதிகாரிகள், நகராட்சி பொறியாளர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News