வந்தவாசியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
வந்தவாசி அடுத்த தெள்ளாறில், மக்களுடன் முதல்வர் முகாமை தொடக்கி வைத்து ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வந்தவாசி அடுத்த தெள்ளாறில், மக்களுடன் முதல்வர் முகாமை தொடக்கி வைத்து ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் முன்னிலைவகித்தார்.
இந்த நிகழ்ச்சியில சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், பொதுமக்களை அதிகாரிகளே நேரிடையாக சந்தித்து, அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படுவதற்காகவே இந்த முகாம் நடைபெறுகிறது. மக்களுக்கு நன்மை பயக்கும் இலவச பேருந்து திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை இ ந் தியாவி ற்கே முன்மாதிரியாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களால் செயல்படுத்தப்படும் இந்த திட்டமே மக்களுடன் முதல்வர் திட்டம். இந்த திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், எல்லா தரப்பு மக்களாலும் பாராட்டப்படும் ஆட்சியேதலைவர்ஸ்டாலின் அவர்களின் ஆட்சி. இங்கே இப்போது இந்த முகாமில் விண்ணப்பித்தால் இன்றே மின் இணைப்பு கிடைக்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களாகிய உங்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதற்கு காலதாமதம் ஆகும். ஆனால் மக்களை தேடி அதிகாரிகள் அதுவும் 14 மேற்பட்ட குறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உங்கள் பகுதிக்கே உங்களை தேடிவந்து மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு தருவது இந்த திராவிட மாடல் ஆட்சியில் மட்டுமே சாத்தியம். சாத்தியமற்றதை சாத்தியப்படுத்து வதே திராவிட மாடல் ஆட்சி. இத்தகைய முகாம்களை பொதுமக்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து, தெள்ளாறு, கூடலூர், கொடியாலம், மீசநல்லூர், நெற்குணம், பழவேரி, சு.காட்டேரி, பென்னாட்டகரம், சேனல், தென்வணக்கம்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர்கள் இளங்கோவன், சுந்தரேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மதன்குமார், மின் செயற் பொறியாளர் நாராயணன், வட்டார மருத்துவ அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கெளஸ் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.