பாலீஸ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

பெரணமல்லூரில் பாலீஸ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் செயின் திருடி சென்றனர்.

Update: 2022-05-14 15:43 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியை சேர்ந்தவர் பழனி, இவரது தாயார் குப்பம்மாள் (வயது 75). பழனி மற்றும் அவரது மனைவி இருவரும் ஆசிரியர்கள். இவர்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் குப்பம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது  மதியம் 1.30 மணி அளவில் பழனியின் வீட்டின் கதவை 2 பேர் தட்டி உள்ளனர்.

அப்போது உள்ளே இருந்து வெளியே வந்த குப்பம்மாள், என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு 2 வாலிபர்கள் நாங்கள் நகைக்கு பாலீஷ் போடுகிறோம். உங்கள் நகையை கொடுத்தால் பாலீஸ் போட்டு தருகிறோம் என்று கூறியுள்ளார்.

இதற்கு குப்பம்மாள் எங்களுக்கு பாலீஷ் எதுவும் போட தேவையில்லை என்றும் நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த 2 வாலிபர்கள் தாகமாக உள்ளது தண்ணீர் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். குப்பம்மாள் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.

அப்போது ஏதோ ஒரு பவுடரை தண்ணீரில் கலந்து உள்ளனர். இந்த பவுடரின் வாசனையால் மயக்கமடைந்த குப்பம்மாள், மயங்கினார். உடனே குப்பம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

பின்னர் மயக்கம் தெளிந்த குப்பம்மாள், தான் அணிந்திருந்த நகைகள் திருடு போனது குறித்து கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்தபோது. அந்த நபர்கள் அங்கு இல்லை. இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் பழனி புகார் அளித்தார். அதன்பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News