பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-02-25 13:32 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே தளரபாடி கிராமதை சேர்ந்தவர் சுதாகர் (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி தங்கம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இன்று சுதாகர் உரம் வாங்குவதற்காக பெரணமல்லூருக்கு சென்றுவிட்டார். மகன், மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மனைவி தங்கம் வீட்டை பூட்டிக்கொண்டு 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் சுதாகர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 10 பவுன் நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து அவர் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News