மலைவாழ் மக்கள் சங்கத்தின் பேரவை கூட்டம்

வந்தவாசியில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-28 02:31 GMT

வந்தவாசியில் நடைபெற்ற  மலைவாழ் மக்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த பேரவை கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தலைமை தாங்கினார்.

வந்தவாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் அப்துல் காதர் , தொடக்க உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுவையில், அடித்தட்டு மக்களாகிய உங்களின் பிரச்சனைகளுக்காக ஏராளமான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்று இருக்கிறது . இருந்தபோதிலும் மலைவாழ் மக்களின் இலவச வீட்டு மனைகள், அதற்கான பட்டாக்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்னும் பல இடங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது, வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் நீங்கள் உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், கல்வி ஒன்று தான் கேட்கும் இடத்திலிருந்து நாம் கொடுக்கும் இடத்திற்கு நம்மை உயர்த்தும் அரசாங்கம் ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் எவ்வளவோ நல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றன.

அவற்றினை நமது பிள்ளைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் பேசுவையில், நமது வீட்டிற்குள், நமது வாழ்விடத்திற்குள் நாம் பேசிக் கொள்வதை விட இது போன்ற பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் பிரச்சனைகளை எடுத்து வைத்தால் தான் அதற்கான கோரிக்கைகளை அரசுக்கு கொடுப்பதும் , அந்தக் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் நமது மலைவாழ் மக்கள் சங்கம் முடிவெடுக்க முடியும். எனவே எந்தவித தயக்கமும் இன்றி உங்கள் பகுதி பிரச்சனைகளையும், இலவச வீட்டு மனை பட்டாக்கள், தொகுப்பு வீடுகள், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி குறித்து உங்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ள நிலைமைகள் பற்றி நீங்கள் தான் தெரிவிக்க முடியும். அதற்காக நடத்தப் படுவதுதான் இந்தப் பேரவை கூட்டம் என கூறினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான தொகுப்பு வீடுகள் மற்றும் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்விளக்கு மின்சாரம் குடிநீர் சாலை வசதிகள் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தப் பேரவை கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ஹரிதாஸ், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர், கள், வழக்கறிஞர்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News