வந்தவாசியில் ஆரணி பா.ம.க. வேட்பாளா் கணேஷ்குமார் அறிமுக கூட்டம்
வந்தவாசியில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இந்தமுறை பாமக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஆரணி தொகுதியில் பாமக போட்டியிட வேண்டும், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமகவிற்கு அதிக அளவில் வாக்கு வாங்கி உள்ளது. இதனால் பாமக கண்டிப்பாக ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் பாமக தலைவரிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக பாமகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகளை அளித்துள்ளது. அதில் ஆரணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் அறிவிக்கப்பட்ட நிலையில் கணேஷ்குமார் தனது வேட்பு மனுவினை அவர் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பாமக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் அறிமுகக் கூட்டம் வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கூட்டுச் சாலை அருகே உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், பாஜக மாவட்ட தலைவா் ஏழுமலை, பாமக மாநில துணைத் தலைவா் மண்ணப்பன், அமமுக மாவட்டச் செயலா் வரதராஜன், தமாகா நிா்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை அறிமுகப்படுத்தி பேசினா்.
அப்பொழுது பேசிய கூட்டணிக் கட்சி தலைவர்கள், பாமக நிர்வாகிகள் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கணேஷ்குமார் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தீவிரமாக பணியாற்றுவது, பிரதமர் மோடி அவர்களின் சாதனைகளை சொல்லி வாக்காளர்களிடம் வாக்கு கேட்பது என கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் பேசினர்.
அதனைத் தொடர்ந்து பாமக வேட்பாளர் கணேஷ் குமார் நன்றி தெரிவித்து பேசினார்.
கூட்டத்தில், பாஜக துரை, சுரேஷ், முத்துசாமி, பாமக இரும்பேடு சிவா, செல்வம், தமாகா வீரராகவன், அமமுக கன்னியப்பன், ஓபிஎஸ் அணி எம்.ஜி.ஆா்.நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.