விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

Update: 2024-09-05 13:47 GMT

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வயலூா் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

போட்டிகளில் கலந்து கொண்ட அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான டெனிகாய்டு ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவிலும், கேரம் போட்டியில் 17 வயதுக்கு உள்பட்ட இரட்டையா் பிரிவிலும், 14 வயதுக்கு உள்பட்ட ஒற்றையா் பிரிவிலும் வெற்றி பெற்றனா்.

அதேபோல, தடகளப் போட்டிகளான குண்டு மற்றும் வட்டு எறிதலில் மாணவி ஒருவா் வெற்றி பெற்றாா். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனா்.  மாணவா்கள் பிரிவில், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான செஸ் போட்டியிலும், 17 வயதுக்கு உள்பட்டோா் இறகு பந்துப் போட்டி, 14 வயதுக்கு உள்பட்டோா் கபடிப் போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனா்

இந்த நிலையில், பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோரை தலைமை ஆசிரியா் மாலவன் தலைமையில் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

திருவண்ணாமலை கால்பந்துப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை வட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான கால்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் பங்கேற்ற மாணவிகள் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இந்த மாணவிகளை பள்ளித் தாளாளா் ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை குழுத் தலைவா் ஜெய்சந்த், அறக்கட்டளை உறுப்பினா்கள் ராஜ்குமாா், சுதா்சன், தலைமை ஆசிரியை ரமணி, உடற்கல்வி ஆசிரியா்கள் கிருஷ்ணகுமாரி, வேதமாணிக்கும், பிரபாகரன் உள்ளிட்டோா்  பாராட்டி பரிசு வழங்கினா்.

Tags:    

Similar News