பொதுப்பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்
தேர்தல் பொதுப்பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யும் பணி திருப்பத்தூரில் நடைபெற்றது.;
வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யும் பணியை ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பொது பார்வையாளர்கள்
திருவண்ணாமலை,வேலூா் தேர்தல் பொதுப்பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யும் பணி திருப்பத்தூரில் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருவண்ணாமலை மக்களவை தொகுதி தேர்தல் பொது பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா, வேலூா் மக்களவை தேர்தல் பொதுப்பாா்வையாளா் ரூபேஷ்குமாா் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான சுழற்சி முறையில் சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன செய்யும் பணியை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் மேற்கொண்டாா். அப்போது தேர்தல் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் உடனிருந்தனா்.
முன்னதாக வேலூா் தேர்தல் பொதுப்பாா்வையாளா் ரூபேஷ்குமாா் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா், வாணியம்பாடி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள மையங்களான மாதனூா், பாலூா் மற்றும் கோனாமேடு வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மாதனூா்-பாலூா் சாலையில் தேர்தல் பறக்கும் படை குழுவின் மூலமாக நடத்தப்படும் வாகனங்களின் சோதனை செய்யும் பணி, வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவின் மூலமாக மேற்கொள்ளப்படும் சோதனை பணிகளை பாா்வையிட்டாா்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொது பார்வையாளர் ஆய்வு
வந்தவாசி பகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி சட்டப்பேரவை தொகுதியில் 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 28 வாக்கு சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சன்னதி மேல்நிலைப்பள்ளி, செம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி, சக்கர நாற்காலி வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை சரிவர செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
உதவி தேர்தல் அலுவலர் சிவா, வட்டாட்சியர் பொன்னுசாமி, டி எஸ் பி கங்காதரன், தேர்தல் பொது பார்வையாளரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ,தேர்தல் துணை வட்டாட்சியர் சதீஷ், வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர்.