நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வந்தவாசியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தொடங்கி வைத்தார்.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கையில் துணிப்பையுடன் பங்கேற்றனர். மேலும் நெகிழி பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும், குப்பைகளை மக்கும் மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி சென்றனர். பொதுமக்களுக்கு ஊர்வலத்தின் போது துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.