திருவண்ணாமலையில் அம்பேத்கரின் 67-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமேதை அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது;

Update: 2023-12-06 10:38 GMT

டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை சபாநாயகர் பிச்சாண்டி.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சட்டமேதை அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் ,மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் , பொதுமக்கள் உடன் இருந்தனர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அப்போது நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் மனோகரன் ,செந்தில் குமார், ஏழுமலை ,பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

ஆரணி

ஆரணி தொகுதி தி.மு.க. சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் மணி ஆகியோர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், நகர கழக பொறுப்பாளர்கள் ,கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு எம் எல் ஏ அம்பேத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் தயாளன், நகர்மன்ற தலைவர் ஜலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய குடியரசு கட்சி திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர்  நினைவு தினத்தை முன்னிட்டு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாரதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கடலாடியில், சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், அன்னரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினார். உடன் கழக எம். ஜி. ஆர். மன்ற துணை செயலாளர் பொய்யாமொழி, சசிக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News