திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப், அவர்கள் ஆய்வு
பெரணமல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் இன்று ஆய்வு செய்தார்.;
பெரணமல்லூர் பகுதியில் திட்டப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சாலை மேம்பாடு திட்டம், பசுமை வீடு திட்டம், சமத்துவபுரம் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், தார் சாலை அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் ரூபாய் 2 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள், அரசு வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள், செயலாளர்கள் உடனிருந்தனர்.