செய்யாறு அருகே கார் விபத்தில் பெண் பலி; 2 பேர் படுகாயம்
செய்யாறு அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் உல்மான்; இவரது மனைவி ஷம்மு பீ (42). உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வந்தவாசியில் வசித்து வரும் தங்கையே பார்ப்பதற்காக சென்னையில் இருந்து காரில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தார். வந்தவாசி தேத்துறை கிராமம் ஏரிக்கரை வளைவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஷம்மு பீ, அவரது மகன் காதர்பாஷா, தங்கை மகன் அஸாரூதின் ஆகியோர் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷம்மு பீ இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.