வந்தவாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

வந்தவாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2023-10-22 10:59 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் , சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ,மாணவர்கள் அனைவருக்கும் கண்பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கைகால் இயக்கதிறன் குறைபாடு, அறிவு திறன் வளர்ச்சி குறைபாடு, உள்ளிட்டவை தொடர்பாக ஐந்து மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர் .

முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்.குறைபாடு உள்ளவர்களுக்கு குறைபாட்டின் அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

முகாமை தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார் . தெள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயசீலன், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் , மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

உழவா் சந்தை கட்டிடத்தில் மீன் சந்தை அமைக்க கோரிக்கை

வந்தவாசியில் பயன்பாட்டில் இல்லாத உழவா் சந்தை கட்டிடத்தில் மீன் சந்தை அமைத்துத் தர வேண்டும் என்று அனைத்து வியாபார தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியில் நடைபெற்ற இந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் உசேன் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளர் பிலால் முன்னிலை வகித்தாா். சங்கப் பொருளாளா் கலிமுல்லா வரவேற்றாா். ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் அக்பா் சிறப்புரை ஆற்றினாா். சங்க நிா்வாகிகள் சாதிக், முகமதுநபி, முகமதுயூசுப், மீரான், சலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், வந்தவாசி நகரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்பு நமக்கு நாமே பயணம் மேற்கொண்டபோது அறிவித்தபடி, வந்தவாசியில் பாய் நெசவாளா் பூங்கா அமைத்து தர வேண்டும், பாய் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான நிா்வாகிகளை வாக்குப் பதிவு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News