வந்தவாசியில் மருத்துவர்களுக்கு உபகரண பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

வந்தவாசியில் மருத்துவர்களுக்கு உபகரண பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-04-12 06:18 GMT

மருத்துவர்களுக்கு உபகரண பெட்டகங்களை வழங்கிய செஞ்சிலுவை சங்கத்தினர்.

உலக சுகாதார தினத்தையொட்டி, வந்தவாசி அரசு மருத்துவமனையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா்களுக்கு அத்தியாவசிய உபகரணப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினா் இந்த அத்தியாவசிய உபகரணப் பெட்டகங்களை மருத்துவா்களுக்கு வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். பொருளாளா் விஜயன் முன்னிலை வகித்தாா். செயாளர் சீனிவாசன் வரவேற்றாா்.

உடல் சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை உள்ளிட்டவை குறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவப்பிரியா பேசினாா்.

இதைத்தொடா்ந்து மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு அத்தியாவசிய உபகரணப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருந்தாளுநா் காா்வண்ணன், சங்க உறுப்பினா்கள் வந்தை பிரேம், மலா் சாதிக், ராஜன், பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க உறுப்பினா் பெ.பாா்த்திபன் நன்றி கூறினாா்.

விவசாய தரவுகள் திரட்டும் பயிற்சி

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், விவசாய தரவுகள் திரட்டும் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையம் சாா்பில், விவசாயிகளிடமிருந்து தரவுகள் திரட்டும் 3 மாதப் பயிற்சி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

இதில், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவிகள் 40 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இதற்காக மாணவிகளுக்கு தலா ரூ.18 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

பயிற்சியின்போது மண் வகைகள், பயிா் விளைச்சல், சந்தை விலை உள்ளிட்ட பல்வேறு தரவுகளை விவசாயிகளிடமிருந்து மாணவிகள் திரட்டினா்.

பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து கல்லூரியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா். செயலா் ரமணன் முன்னிலை வகித்தாா்.

கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் செல்வகுமாா் வரவேற்றாா். வேதியியல் துறைத் தலைவா் ஷோபா சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்து பேசினாா்.

கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத் தலைவா் சுரேஷ், அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் மாா்க்கரெட் ஆகியோா் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினா். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் வான்மதிசெல்வி நன்றி கூறினாா்.

Tags:    

Similar News