வந்தவாசி அருகே 3 ஆண்டுகளாக கிளீனிக் நடத்திய போலி டாக்டர் அதிரடி கைது
டிப்ளமோ படித்துவிட்டு 3 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருத்துவக் கல்வி பயிலாமலே ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் போலி டாக்டர் ஒருவர் கிளீனிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக வந்தவாசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையில் தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் நேற்று இரவு நல்லூர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், போலி டாக்டர் நடத்தி வரும் கிளீனிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. மேலும் அங்கு ஊசி செலுத்துவதற்கான சிரஞ்சு, குளுக்கோஸ் பாட்டல்கள், மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவாசி டவுன் காந்தி சாலையை சேர்ந்த சசிகுமார், என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் டிப்ளமோ படித்துவிட்டு 3 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிந்தது. இதையடுத்து சசிகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வந்தவாசி மாஜிஸ்திரேட் செந்தில்குமார் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தம்பி மீது தாக்குதல்: அண்ணன் உள்பட 3 பேர் மீது வழக்கு
வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சோந்தவா் பரசுராமன் . இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த இவரது அண்ணன் ராமானுஜம் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிறதாம்.
இந்த நிலையில், பரசுராமன் வீட்டுக்குச் சென்ற ராமானுஜம், அவரது மனைவி சங்கரி, மகள் அன்பரசி ஆகியோா் சோந்து பரசுராமனிடம் தகராறு செய்து அவரை தாக்கினாா்களாம்.
தடுக்க வந்த பரசுராமனின் மகன் நாராயணனை கத்தியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த நாராயணன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பரசுராமன் அளித்த புகாரின் பேரில் ராமானுஜம், சங்கரி, அன்பரசி ஆகியோா் மீது வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.