44 வதுகூட்டுறவு சங்க பேரவை கூட்டம்

Cooperative Society Bank -44 வது கூட்டுறவு சங்க பேரவை கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.

Update: 2022-10-17 01:28 GMT

உறுப்பினர்களுக்கு பங்கு ஈவு தொகை வழங்கிய புதுப்பாளையம் ஒன்றிய தலைவர் சுந்தரபாண்டியன்

Cooperative Society Bank - திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், ஆசிரியர்கள், நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் மூலம் பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், ஆசிரியர்கள், நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு பேரவை கூட்டம், வந்தவாசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நாதன் தலைமை வகித்து பேசினார். செயலாளர் ரவி வரவு செலவு அறிக்கை வாசித்தார். சங்கத் துணைத் தலைவர் சத்தியபாமா மற்றும் சங்க இயக்குனர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவு தொகையாக, ரூ. 17 லட்சம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஆசிரியர்கள், கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு ரூ. 23 லட்சத்தில் பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் பேரவை கூட்டத்தில், சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், துணைத் தலைவர் சண்முகம் இயக்குனர்கள் மேரி தண்டபாணி ஏழுமலை ஆகியோர் முன்னிலையில் கூட்டுறவு கடன் சங்க ஈவுத்தொகை 23 லட்சத்து 63 ஆயிரத்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு கூட்டுறவு கடன் சங்க ஈவு தொகையை, உறுப்பினர்களுக்கு வழங்கி பேசினார். இக்கூட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க பேரவை கூட்டத்தில் 1011 உறுப்பினர்களுக்கு 14 சதவிகித ஈவு தொகை வழங்கப்பட்டது.

ஆரணி கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க பேரவை கூட்டம் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் அமுதா முன்னிலை வகித்தார்.  செயலாளர் சரத்துராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் கமலக்கண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசீலி,  நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏழுமலை, திருமால் , அசோகன், முத்து, செல்வராணி,  புவனேஸ்வரி,   ஏழுமலை,  பிரகாஷ்  மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு கணக்கு,  தணிக்கை சான்று,  பதிவு செய்தல், உத்தேச வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 1011 உறுப்பினர்களுக்கு 14 சதவிகித ஈவுத்தொகையாக ரூபாய் 8,22, 923. வழங்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News