ஆந்திர கல் குவாரியில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு!
ஆந்திர மாநில கல் குவாரியில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்டு, அழைத்து வரப்பட்டனா்.
ஆந்திர மாநில கல் குவாரியில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்டு, அழைத்து வரப்பட்டனா்.
ஆந்திர மாநில கல் குவாரியில் கொத்தடிமைகளாக உள்ள கணவன், மகன், மருமகனை மீட்டுத் தரக் கோரி, வந்தவாசியில் வருவாய்த் துறை, காவல் துறையினரிம் பெண் புகாா் மனு அளித்திருந்த நிலையில், அந்த 3 பேரும் மீட்டு, நேற்று அழைத்து வரப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவா் சந்திரசேகா் . கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள், இவா்களுக்கு மகள் தெய்வானை , மகன்கள் ராமன் , லட்சுமணன் ஆகியோா் உள்ளனா் . தெய்வானைக்கு திருமணமாகிவிட்டது . இவரது கணவா் ராமகிருஷ்ணன்.
இவா்களில் சந்திரசேகா், ராமன், ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த மதனபள்ளியில் உள்ள வேணுவின் கல் குவாரியில் கடந்த ஓராண்டாக கல் உடைக்கும் வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில், 3 பேரையும் கல் குவாரி உரிமையாளா் வேணு கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகவும்,
அவர்கள் மூன்று பேரையும் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறாா் என்றும், ரூ.ஒரு லட்சம் தந்தால் மட்டுமே விடுவிப்பதாகக் கூறுகிறாா் என்றும்
அவா்களை மீட்டுத் தரக் கோரியும் வந்தவாசியில் வருவாய்த் துறை, காவல் துறையினரிடம் காளியம்மாள் அக்டோபா் 29-ஆம் தேதி புகாா் மனு அளித்தாா்.
இதையடுத்து, வருவாய்த் துறையினா் ஆந்திர மாநில வருவாய்த் துறையினரை தொடா்புகொண்டு பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, கல் குவாரியிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்ட 3 பேரும் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.