திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் 15வது சாதாரண கூட்டம்

Grama Panchayat Office -திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் 15வது சாதாரண கூட்டம் நடைபெற்றது

Update: 2022-10-21 07:16 GMT

கமலாட்சி இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற தெள்ளாறு ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

Grama Panchayat Office -திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் 15-வது சாதாரண கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் நா.அறவாழி வரவேற்றாா். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியம் 2022-23 ஆம் ஆண்டு பணிகள் தோவு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரால் 105 பணிகள் ரூ.6.82 கோடி மதிப்பில் நிா்வாக அனுமதி பெறப்பட்டது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அத்தியாவசிய பணிகளை தேர்வு செய்து பணி பட்டியல்களை அங்கீகரிக்க மன்ற ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் இல.சரவணன், சாந்திகண்ணன், ஞானசௌந்தரி , ஆறுமுகம், சுஜாதா தவமணி, செந்தில்குமார், முத்துக்குமார், சுப்பிரமணி, முருகேசன், முத்துசெல்வம், அரவிந்தன், மாவட்ட ஊராட்சி உதவியாளர் சுந்தரமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமேலழகன் நன்றி கூறினார்.

தெள்ளார் ஒன்றிய குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர் ராஜன் பாபு துணைத் தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வந்தவாசியை அடுத்த தேசூரில் இருந்து கீழ் புதூர் சிவனம் நடுக்குப்பம் வந்தவாசி வழியாக சென்னைக்கு மீண்டும் அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் பேசினர்.

மேலும் கொடியாலம் ஊராட்சியில் மயான பாதையில் சீரமைக்க வேண்டும் இருளர் சமுதாயத்தவர் காலனிக்கு சிமெண்ட் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைச் தொடர்ந்து பேசிய ஒன்றிய தலைவர் கமலாட்சி இளங்கோவன் உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆரணி ஒன்றிய குழு கூட்டம்

ஆரணி ஒன்றிய ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய குழு துணை தலைவர் ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர் ஜெயபிரகாஷ் கடைசியாக நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டம் 371 ஆவது. தீர்மானத்தோடு முடிக்கப்பட்டது.  அதன் பின்னர் இப்போது தான் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தீர்மான எண் 386 இல் இருந்து தொடங்குகிறது நடுவில் உள்ள 14 தீர்மானங்கள் என்ன என்பது தெரியவில்லை,  இதை யாருக்கும் தெரிவிக்காமல் எப்படி தீர்மானங்களை நிறைவேற்றினீர்கள் ,  இது குறித்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.  பின்னர் அவரும் பிற அதிமுக உறுப்பினர்களும்  விளக்கம் தேவை என கூறினர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி பதிலளித்து கூறியதாவது,  சென்ற கூட்டம் முடிந்த பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதற்கான புத்தகத்தில் உள்ளது,  இதை இப்போது படித்துக் காட்ட நாங்கள் தயார் எனக்கு கூறி படித்துக் காட்டினார்.

மேலும் அதிமுக உறுப்பினர்கள் கடந்த கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று இருந்தால் அவர்களுக்கு தீர்மானங்கள் குறித்து புரிந்து இருக்கும்.

கூட்டம் தொடங்கிய உடனே விடுபட்ட தீர்மானங்களை படித்துக் காட்டாதது தவறுதான் என்றார்.  இதை ஏற்றுக்கொண்ட அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  பின்பு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News