இரு சக்கர வாகன விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு

Update: 2021-01-25 05:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வந்தவாசியை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய தாயார் சின்ன குழந்தை. இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பச்சையம்மாள் ஆகிய 3 பேரும் வந்தவாசியில் உள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து ரத்தப் பரிசோதனை செய்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்ற போது வந்தவாசி விளாங்காடு சாலை பாதிரி கிராமம் கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பின் பக்கத்தில் அதிக வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியது.

இதில் நிலைகுலைந்து 3 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த வந்தவாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் சின்னகுழந்தை ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். படுகாயமடைந்த பச்சையம்மாளை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் உயிரிழந்தார்.இதுகுறித்து வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News