உலக சுற்றுச்சூழல் தின விழா: மரக்கன்று நட்டு துவக்கி வைத்த ஆட்சியர்
மாவட்ட ஆட்சியரகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவுக்கு, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி தலைமை வகித்தாா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) குமரன், வட்டாட்சியா்கள் தியாகராஜன் (திருவண்ணாமலை), சரளா (கீழ்பென்னாத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி, அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, தண்ணீா் ஊற்றினாா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் ரவி, சாப்ஜான் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி எக்ஸ்னோரா சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி 100 மரக்கன்றுகள் நடும் விழா
வந்தவாசியில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரியில் வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக் தலைமையில் நேற்று நடைபெற்றது . பாதிரி ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், வந்தவாசி பகுதிகளில் அதிக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெங்கடேசன் ரகுபாரதி ஆகியோருக்கு எக்ஸ்னோரா வந்தவாசி கிளை சார்பில் பசுமை நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எக்ஸோரா துணைத் தலைவர், எக்ஸோரா நிர்வாகிகள், விவசாயிகள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.