திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் முருகேசன் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ், கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி உறுதிமொழி மற்றும் கை கழுவும் நிகழ்ச்சிகளை கலெக்டர் வளாகத்தில் 02.08.2021 அன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜீவா வேலு பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது