திருவண்ணாமலை கிரிவலம் வருவதற்கான சரியான முறை, பலன்கள்..

Girivalam Benefits in Tamil-திருவண்ணாமலை கிரிவலம் வருவதற்கான சரியான முறை மற்றும் பலன்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

Update: 2022-12-05 14:56 GMT

Girivalam Benefits in Tamil

Girivalam Benefits in Tamil

அண்ணுதல்' என்றால் 'நெருங்குதல்' எனப்பொருள். 'அண்ணா' என்றால் 'நெருங்க முடியாதது' என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் 'திருஅண்ணாமலை' ஆயிற்று.

செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே

எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்

இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்

பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே' என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.

திருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு. பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது. கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இளம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது. அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும்.

நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் பலவித தரிசனங்கள்,அதன் பலன்கள்

எமலிங்கத்தின் வாசலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஒளதும்பர தரிசனம் என்றுபெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற் கான தீர்க்காயுளைப் பெறவைக்கும். அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும்.

கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு  பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர். இந்த தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால், பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.

குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்,தொடர்ந்து வந்து, பூதநாராயணப் பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும்,திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.

கிரிவல பலன்கள்

ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.

* ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்

* திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.

* செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.

* புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.

* வியாழன் - ஞானம் கூடும்.

* வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.

* சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.

கிரிவலம் வரும் முறை

 நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி,குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும். ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.

மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள்

பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும்,வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.

காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது.

மலையை நோக்கி நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது.

திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் கூடாது. கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம்.

சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News