திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி மாத பிரதோஷம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
பிரதோஷ வழிபாடடில் கலந்து கொண்ட பக்தர்கள்.
பிரதோஷத்தை ஒட்டி நந்திக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் இன்று நடந்தது. திருக்கோயில் ஐந்து பிரகாரகங்களில் உள்ள நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால், நாளை மறுநாள் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று கிரிவலம் சென்றனர்.