கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர்

கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்;

Update: 2024-07-10 02:03 GMT

கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் காசோலை சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

கலைத்துறையில் சிறந்த விளங்குகின்ற கலைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களு திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளான குரலிசை கருவி இசை பரதநாட்டியம் கிராமிய நடனம் மற்றும் ஓவியம் உள்ளிட்ட 5 கலை பிரிவுகளில் கடந்த ஆண்டு நவம்பர் 19ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டது.

இதில் வெற்றிபெற்றவர்களுக்கு காசோலை சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,

குரலிசை பிரிவில் முதல்பரிசு க.சியாமளா, 2ம் பரிசு சி.விஷ்ணுபிரியா, 3ம் பரிசு தீ.விஜயலட்சுமி,

கருவிஇசை பிரிவில் முதல் பரிசு மா.சிவா ,2ம் பரிசு மு.அபிஷேக், 3ம் பரிசு எஸ். மோகன்ராஜ் ,

பரதநாட்டியம் பிரிவில் முதல் பரிசு ரா.கீதா 2ம் பரிசு ஆ.பிரியதர்ஷினி, 3ம் பரிசு ச.சற்குணா

கிராமிய நடனம் பிரிவில் முதல் பரிசு அ.இளவரசி, 2ம் பரிசு கி.கார்த்தி 3ம் பரிசு அ.சூர்யா

ஓவியம் முதல் பரிசு ப.தமிழ்அம்பேத்கர் 2ம் பரிசு ப.லட்சயா 3ம் பரிசு ப.பிரவீன்குமார்

ஆகியோருக்கு முதல் பரிசு ரூ.6000 2ம் பரிசு 4500 3ம் பரிசு 3500 வீதம் 5 கலைபிரிவுகளில் மொத்தம் 15 வெற்றியாளர்களுக்கு காசோலை சான்றிதழ்வழங்கி பாராட்டினார்.

இந்த விழாவில் காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நீலமேகன் திருவண்ணாமலை இசைபள்ளி தலைமை ஆசிரியர் சியாமகிருஷ்ணன் மற்றும் வெற்றியாளர்களின் பெற்றோர்கள், இசை பள்ளி மாணவர்கள், இசை பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News