திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-11-05 10:39 GMT

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் வேலூா் மண்டல பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் நரேஷ்சந்த் ஜெயின் தலைமை வகித்தாா்.  பன்னீர்செல்வம், சுபம் ராதா, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் சத்யா சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் தேசிய தலைவரும், நிறுவனருமான டாக்டர் ஹென்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டிடிசிபி உதவி இயக்குனர் பவித்ரா தேவி , அமைப்பு செயலாளர் செந்தில்குமார் , தேசிய ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பட்டா வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ள பொது மக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் ஸ்டாலின் ,  பட்டா மனைகளை அங்கீகாரம் பெறும் வகையில் இறுதியாக ஒரு அரிதான வாய்ப்பினை வழங்கி மனை வரன்முறை சட்டத்தை ஆறு மாத காலம் எதிர்வரும் 29 -2 -2024, வரை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியமைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் புதிய வீட்டுமனைப் பிரிவை ஏற்படுத்த இப்போதுள்ள 7 மீட்டா் அணுகு சாலை என்ற அளவை மாற்றியமைத்து 6 மீட்டா் என்று குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர், மாவட்ட இணை செயலாளர் கோபிநாத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் திருவண்ணாமலை மாவட்ட துணை தலைவர் குரு கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News