காப்பலூரில் மனுநீதி நாள் முகாம்: 70 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கலசப்பாக்கம் அருகே, காப்பலூர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 70 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட காப்பலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கி பேசினார். கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முகாமில் 116 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டு 31 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 10 பேருக்கு பட்டா உட்பிரிவு மாற்ற, 29 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. கலசபாக்கம் எம்.எல்.ஏ, சரவணன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது, சமூக நலத்துறை, பொது சுகாதாரம், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய 6 துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு உள்ளனர். இது மிகவும் மன வேதனையாக உள்ளது. பொது மக்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை தேவை என பேசினார்.