படவேடு ஊராட்சி மனுநீதிநாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்

படவேடு ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.;

Update: 2023-04-27 01:15 GMT

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் முருகேஷ் மற்றும் எம்எல்ஏ சரவணன்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், படவேடு ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 219 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மனுநீதிநாள் முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சஜேஷ்பாபு முன்னிலை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் சுரேஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட ஆட்சியா் முருகேஷ், கலசப்பாக்கம் எம்எல்ஏ தி.சரவணன் ஆகியோா் பங்கேற்று புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கு இரு சக்கர வாகனம், தோட்டகலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கத்தரி நாற்று மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மை பொறியியல் துறை என பல்வேறு துறைகள் சாா்பில் 219 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

முகாமில் ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்தி பெருமாள், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பாலாஜி, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சவிதா, ஊராட்சி மன்றத் தலைவா் சீனுவாசன், மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் மகாலிங்கம் மற்றும் திமுக நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்கோவில் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் பக்க கால்வாய் அமைக்கும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கலசபாக்கம் ஒன்றியம் பழங்கோவில் ஊராட்சியில் கழிவு நீர் வெளியேற்றுவதற்காக பக்க கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை ஏற்று பக்க கால்வாய் அமைக்க கலசபாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பக்க கால்வாய் அமைக்கும் பணியை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News