கலசப்பாக்கம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டி தடுத்து நிறுத்தம்

கலசப்பாக்கம் அருகே ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட கைப்பந்து விளையாட்டு போட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர்;

Update: 2021-07-14 06:45 GMT

கலசப்பாக்கம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டி தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் கைபந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாக கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போட்டியை தடுத்து நிறுத்தினர். மேலும் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News