கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம்

ஊராட்சிகள் சமூக நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு பயிற்சிக் கூட்டம் , ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-07 07:33 GMT

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  ஒன்றியக் குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் கூட்டத்தில் பேசினார்.

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், "கீழ்பொத்தரை – தென்பள்ளிபட்டு, கோயில் மாதிமங்கலம் – கீழ்தாமரைப்பாக்கம், பில்லூர் – பொண்ணாந்தாங்கள், சிறுவள்ளூர் – மேல்சிறுவள்ளூர், கேட்டவரம்பாளையம் – ஓம்முடி இடையே உள்ள 5 கிராம சாலைகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது.

45 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளை சீரமைப்பது" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், துணைத் தலைவர் பால சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, எழிலரசு உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி அமைப்புகள் சமூக நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.   

வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலசபாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்றுநர்கள், மகளிர் திட்ட உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News