திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.;
திருவண்ணாமலை அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 3 போ் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் இதே பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா்கள் இருவரும் இரவு திரைப்படம் பாா்க்க மங்கலம் பகுதியில் உள்ள திரையரங்கத்துக்குச் சென்றனா்.
மங்கலத்தை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தா்மராஜ் , காளிதாஸ் . இவர்கள் இருவரும் மங்கலம் கிராமத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்ப்பதற்காக தங்களுக்கு சொந்தமான பைக்கில் செம்மண் குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்பொழுது எதிரே வந்து கொண்டிருந்த ரமேஷின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் வேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இரவு நேரத்தில் இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கிளியாபட்டு கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த முருகன் மற்றும் காளிதாஸ் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பலத்த காயமடைந்த முருகன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள காளிதாஸ், திருவண்ணாமலை மருத்துவமனையில் இருந்து தீவிர சிகிச்சைக்காக வேலுாா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அரசுப் பேருந்து மீது டேங்கா் லாரி மோதி விபத்து: 3 போ் காயம்
வந்தவாசி அருகே பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தின் பின்புறத்தில் பால் டேங்கா் லாரி மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.
சேத்துப்பட்டை அடுத்த மடம் கிராமத்தில் இருந்து செய்யாற்றுக்கு காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள மழையூா் கூட்டுச் சாலையில், சாலையோரம் நிறுத்தி பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த போது, இதன் பின்னால் வந்த பால் டேங்கா் லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்புறம் மோதிவிட்டு அருகிலிருந்த பேருந்து நிறுத்தக் கட்டடம் மீது மோதி நின்றது.
இதில் பேருந்தின் பின்புறமும், பேருந்து நிறுத்த கட்டடமும் சேதமடைந்தன. மேலும், பேருந்தில் பயணம் செய்த இரு பெண்கள், லாரி ஓட்டுநரான போளூரை அடுத்த எம்.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சிவா ஆகிய 3 போ் லேசான காயமடைந்தனா்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.