திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் அன்பரசி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் அன்பரசி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில் இப்பொழுது வடகிழக்கு பருவ மழை அதிக அளவு பெய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல் மழை அதிக அளவு பெய்து வருவதால் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் அதிகளவு கரை புரண்டு ஓடுகிறது.
அதனால் வெள்ளம் ஊருக்குள் வராத அளவிற்கு மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும் குழந்தைகள் யாரும் ஆற்றங்கரை ஓரம் மற்றும் ஏரி குளம் குட்டை பகுதியில் குழந்தைகள் பெரியவர்கள் யாரும் செல்லா வண்ணம் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். மேலும் கலசப்பாக்கத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் சரியாக அமைத்துக் கொடுக்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
தமிழக அரசின் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு தட்டு டம்ளர் போன்றவை சரியாக வழங்க வேண்டும்.
மேலும் கலசபாக்கத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனை நாம் அனைவரும் அனைத்து கவுன்சிலர்களின் ஒத்துழைப்புடன் சரியான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்று ஒன்றிய குழு தலைவர் பேசினார்.
ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.