லாட்டரி சீட்டு விற்றவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.;

Update: 2023-04-30 10:56 GMT

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கலசபாக்கம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் சோமு என்ற சோமசுந்தரம். இவர் கடலாடி மெயின் ரோட்டில் சைக்கிள் ஷாப்பிடம் நின்று கொண்டு லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டு இருந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று சோமுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளும், ரூ.80 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.30 ஆயிரம் அபராதம்

கவுத்திமலை காப்புக்காட்டுக்கு வனவிலங்குகளை வேட்டையாட சென்றவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர்  நள்ளிரவு கவுத்திமலை காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் நெற்றியில் பேட்டரியுடன் சுற்றி திரிவதை கண்ட வனத்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.

இதில் மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி (வயது 30) என்பவரை மடக்கி பிடித்தனர். அவருடன் வந்த மற்ற 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட தங்கமணிக்கு மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை தாலுகா களஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 32), கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (39) இருவரும் சாராய விற்பனை செய்து வந்தனர்.

செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலெக்டர் முருகேஷிற்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மோகன்தாஸ், ஏழுமலை ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News