கலசப்பாக்கம் பகுதியில் கரும்புசாறு விற்கும் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்
கலசப்பாக்கம் பகுதியில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் கோவிட் 19 சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் மற்றும் மருத்துவர்கள் அதிகாரிகள் இருந்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், தடுப்பூசியின் அவசியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அதன் சிறப்பைப் பற்றி உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கலசபாக்கம் தாலுக்கா எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த நெடுஞ்சாலையில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் ரமேஷ் மற்றும் ரஞ்சனி தம்பதியினர் தங்களது தினசரி வருமானத்திலிருந்து ரூபாய் 5000, கொரோனா பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். அவர்களை ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்