கலசப்பாக்கம் அருகே ஸ்டேட் வங்கி கிளை புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு
கலசப்பாக்கம் அருகே ஸ்டேட் வங்கி கிளை ஏ.டி.எம். மையத்தை சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏ.டி.எம். திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன் தலைமை வகித்தார்.
புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ் குமார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கிளையின் மேலாளர் திலீப் அண்ட் ராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கலந்து கொண்டு வங்கியின் புதிய கிளை மற்றும் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பொது மேலாளர் முரளி கிருஷ்ணா , இணை பொது மேலாளர் ரஞ்சன் சின்கா, மண்டல மேலாளர் சுப்பையா ,மனிதவள முதன்மை மேலாளர் பாலாஜி ,மனித வள மேலாளர் கிஷோர், மேலாளர்கள் ஹேமந்த் குமார் ,முரளிதரன், ஜெயபிரகாஷ் ,கிளை மேலாளர்கள் சரவணன் , மோகன் குமார், கிரி செல்வநாயகி, அகிலா ,ரமேஷ், இளஞ்செழியன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
187 பேருக்கு பணி ஆணை
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் இளைஞா் திறன் திருவிழா போளூரில் நடைபெற்றது.
மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் வீட்டு வசதி நல அலுவலக உதவி மேலாளா் ஜெயசுதா தலைமை வகித்தாா். மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகம் தியாகராஜன், இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய அலுவலா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாண்மை அலகின் வட்டார இயக்க மேலாளா் பன்னீா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் சையத்சுலைமான் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 187 இளைஞா், இளம் பெண்களுக்கு பணி ஆணையை வழங்கினாா்.
இந்தத் திருவிழாவில் 525 மேற்பட்டஇளைஞா்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை சுதா, உதவித் திட்ட அலுவலா் ராஜீவ்காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.