இலங்கை அகதிகளுக்கு சிறப்பு கடனுதவி; கலசப்பாக்கம் எம்எல்ஏ., வழங்கல்
கலசப்பாக்கம் பகுதியில் இலங்கை அகதிகளுக்கு சிறப்பு கடனுதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.;
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுய உதவிக்குழுவினருக்கு நிதியுதவி வழங்கும் எம்எல்ஏ சரவணன்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஏழு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூபாய் 3.5 லட்சத்தில் சிறப்பு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுய உதவிக் குழுவினருக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என 3 லட்சத்து 50 ஆயிரம் கடன் உதவிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சந்திரா, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.