கலசப்பாக்கத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கலசப்பாக்கத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கலசபாக்கம் அடுத்த தேவராயன்பாளையம் ஊராட்சி பெருமாபாளையம் கிராமத்தில் எழுந்தருளும் அருள்மிகு செல்வ விநாயகர் , மாரியம்மன் ஆ கி ய இ ர ண் டு கோவில்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தேவராயன்பாளையம் ஊராட்சியி ல் பெருமாபாளையம் கிராமத்தில் நேற்று அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஆகிய இரண்டு கோவில்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
அதில் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மங்கல இசை அனுஷ பூஜை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் ,மகாலட்சுமி ஹோமம் , நவகிரக ஹோமம் பூரண ஜோதி ஹோமம் மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் வாஸ்து சாந்தி பிரவேசபலி மிருத சங்கிரனம் கலஸ்தபானம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜை பிரவேச பூஜை முதல் கால யாக பூஜை தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் காலை யாக பூஜை கோ பஜை மங்கல இசை அனுக்ஞை பூஜை மிருத் சங்கரணம் அங்குரார்ப்பணம் வாஸ்து சாந்தி ஹோமம் பிரவேசபலி மிருதசங்கிரனம் கலஸ்தபானம் ஆகிய பூஜைகள் நடைபெற்று. இறுதியாக நேற்று காலை 9:30க்கு கோபுர கலச கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10:20 மணி அளவில் அருள்மிகு செல்வ விநாயகர் ,கெங்கையம்மன் ஆக ய இரண்டு கோவில்களுக்கும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அ க் ரி கிருஷ்ணமூர்த்தி,எம் எல் ஏ, மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன், பஞ்சாயத்து தலைவர் புஷ்பா செல்வம், மற்றும் கோவில் உபைதாரர்கள் ,உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ,ஊர் பொதுமக்கள், அர்ச்சகர்கள் 500 மேற்பட்ட பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பாப்பார மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வலையாம்பட்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாப்பார மாரியம்மன் ஆலய அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று புனித நீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.