திருவண்ணாமலை அருகே கஞ்சா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி, ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில், தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கட்டிபூண்டி கிராமம், பூவரசம்மாள் தெருவைச் சேர்ந்த பாரத்குமார் என்பவர் சந்தவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துவாம்பாடி ஏரிக்கறையின் அருகே கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்து, சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடமிருந்து 160 கிராம் எடைகொண்ட கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.