திருவண்ணாமலை அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் காயம்
திருவண்ணாமலை அருகே சாலையோர விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.;
திருவண்ணாமலை அருகே சாலையோர விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், காரியந்தல் கிராமத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வர பள்ளி சார்பில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை காரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஐசக் மகன் தீபக், என்பவர் ஓட்டிச்சென்றார்.
தொடர்ந்து, வெளுங்கநந்தல் கிராமத்தில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிட முயன்றபோது எதிா்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பஸ் அருகில் உள்ள சாலையோர விவசாய நிலத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் 20 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி பஸ் தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மினி லாரி கவிழ்ந்து விபத்து பெண் உயிரிழப்பு, 10 பேர் காயம்
தண்டராம்பட்டு அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 10 பேர் பெண்கள் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கண்ணக்கந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவா், தனக்குச் சொந்தமான மினி லாரியில் விவசாய கூலித் தொழிலாளா்கள் 20-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்றாா்.
தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஏரிக்கரை வளைவுப் பகுதியில் சென்றபோது, நிலை தடுமாறிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்கள் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த குணசுந்தரி என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.