ரூ.2.10 கோடியில் உணவு பொருள் பதப்படுத்தும் நவீன மையத்திற்கு அடிக்கல்
துரிஞ்சாபுரத்தில் ரூ.2.10 கோடியில் உணவு பொருள் பதப்படுத்தும் நவீன மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபும் ஒன்றியத்தில் சர்வதேச அளவில் தரமான மணிலா எண்ணெய் உற்பத்தி செய்ய ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உணவு பொருள் பதப்படுத்தும் நவீன மையம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 75 ஹெக்டரில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டு நிலக்கடலையிலிருந்து சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் திட்டத்தில் மாவட்ட, மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் திருவண்ணாமலை மாவட்டம் இருந்து வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் விவசாயிகளை கொண்ட 35 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை ஒருங்கிணைத்து திருவண்ணாமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மணிலாவை கொண்டு மரசெக்கு நிலக்கடலை எண்ணெய் சர்வதேச அளவில் உயர்ந்த தரத்துடன் மத்திய அரசின் கீழ் நியாயமான விலையில் நுகர்வோர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசின் சார்பில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் வள்ளி வாகை ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளானந்தல் கிராமத்தில் நவீன இயந்திரங்களை கொண்டு மணிலா எண்ணெய் உற்பத்தி செய்யவும் மற்றும் சந்தைப்படுத்தும் மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து. இப்பணிக்கான துவக்க விழா நடைபெற்றது. விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். கலசபாக்கம் எம்.எல்.ஏ , சரவணன் , ஒன்றிய குழு தலைவர் தமயழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.