திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு புதிய உறுப்பினர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், மல்லவாடி ஊராட்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், மல்லவாடி ஊராட்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு குழு உறுப்பின ர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்ட்ட மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குதல் மற்றும் மாணவ, மாணவியர்களின் சுற்றல் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட அவசிய பொறுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை வழங்கினார்கள்.
இதன் தொடர்ச்சியாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றையதினம் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கீழ்கண்டவாறு உறுதி மொ ழி யை எடுத்துக்கொண்டனர்.
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நான் பள்ளியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, பள்ளியின் வளர்ச்சிக்கும். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும்,
அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும், மாணவர்களுக்குச் சென்றடைவதையும், பள்ளியின் வளர்ச்சிக்கு சமூகம் மற்றும் பிற துறைகளின் பங்களிப்பையும் உறுதிசெய்வேன் என்றும்,
எனது பள்ளி மாணவர்களுக்கு தரமான, சமமான கல்வியை உறுதிபடுத்துவேன் என்றும், கல்வி கற்க உகந்த, மகிழ்ச்சியான பள்ளிச் சூழலை உருவாக்குவதற்கு ஏற்ற, பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி, பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்என்றும் உளமார உறுதியளிக்கிறேன் என உறுதிமொழியை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிதாஸ், தலைமை ஆசிரியர். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.