ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-04-22 02:54 GMT

தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா ,  மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் 80க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.

அந்தப் பகுதி மக்களுக்கு வீடு, மயானம் போன்ற எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததால் கடும் சிரமத்தில் வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு உடனடியாக வீடு வழங்கக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து  தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில் தலித் மக்கள் வசிக்கும் மலைப்பகுதிக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் கிச்சா, மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, மேற்குமாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் சிவகுமார், போளூர் ஒன்றிய செயலாளர் மார்க் பந்து, ஒன்றிய மகளிரணி செயலாளர் கீதா ஆகியோர் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் அங்கு வசித்து வரும் தலித் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags:    

Similar News