கலசபாக்கம் அருகே மழையால் வீடு இழந்தோருக்கு நிவாரணம்
கலசபாக்கம் அருகேமழையால் வீடு இழந்தோருக்கு நிவாரணஉதவிகளை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்;
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கீழ் பொத்தரை, சிட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டோருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
இவ்விரு கிராமங்களில் தொடர் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டோருக்கு அரசின் நிவாரண உதவியாக அரிசி , மண்ணெண்ணெய், வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் ஜெகதீசன், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.