சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-12-30 02:44 GMT

பைல் படம்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகா பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 57), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி 12 வயதுடைய அவரது உறவினரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சின்னராஜை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி  தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சின்னராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து சின்னராஜை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.

Tags:    

Similar News