டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த நபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சியில் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த நபர் கைது செய்யப்பட்டார்;

Update: 2021-12-01 14:19 GMT

டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் 

திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சியில் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து வழிப்பறி செய்த ரூ.19000/- , இருசக்கர வாகனம் மற்றும் பட்டாகத்தி பறிமுதல்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சரவணன், வயது 43 என்பவர், காஞ்சி காமராஜ் நகர், டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்,

கடந்த 24.11.2021-ந் தேதி அவரும் , அவருடன் பணிபுரியும் முருகன் என்பவரும் டாஸ்மாக் கடையில் விற்பனை முடித்துவிட்டு கணக்கு பார்த்து விட்டு இரவு 9 மணியளவில் வெளியே வரும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர், அதை தடுக்க முற்பட்டபோது கத்தியால் வெட்டியதில் அவருக்கு  கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. மேலும் 10,000 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து,  தனிப்படை அமைக்கப்பட்டு CCTV காட்சிகள் உதவியுடனும், சைபர் கிரைம் காவல் நிலையத்தின் உதவியுடனும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

விசாரணையில், செங்கம் , ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த  இசக்கி பாண்டியன் ஆகிய இருவரும் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்தவர்கள் என்பதும்  இவர்கள் மீது கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதில் இசக்கி பாண்டியன் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கோவை மாநகரம், சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கேட்டவரம்பாளையம் அருணகிரிமங்கலம் ரோடில் வாகனத்தணிக்கை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து வழிப்பறி செய்த 19000/- ரூபாய் பணம், இருசக்கர வாகனம் மற்றும் பட்டாகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News