வனவிலங்குகளை வேட்டையாட மின்வேலி: முதியவர் கைது

திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-05-01 10:39 GMT

திருவண்ணாமலை வனச்சரக பகுதியில் சில இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனகாப்பாளர்கள் சிரஞ்சீவி, முகமது சுல்தான், பாலாஜி, மறுவரசன், மணிவேலன், சங்கீதா ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர், திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுத்தி மலை, காப்புக்காடு, திருவண்ணாமலை - காஞ்சி சாலை காப்புக்காட்டு ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மின்வேலிகள் ஏதேனும் அமைக்கப்பட்டு உள்ளதா என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புனல்காடு கிராமம் காப்புக்காட்டை ஒட்டியுள்ள சண்முகம் என்பவர் அவரது பட்டா நிலத்தில் வனவிலங்கு வேட்டைக்காக மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சோதனையில் மின்வேலியில் சிக்கி 2 ஆண் புள்ளிமான் மற்றும் ஒரு நாய் இறந்து கிடந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மின்வேலி அமைத்த சண்முகத்தை கைது செய்து விசாரணை செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே விவசாயி கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கு: வனவிலங்குக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறந்தது அம்பலம் .  

தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்சிறுபாக்கம் ஊராட் சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நட ராஜன் (வயது 70), விவசாயி. இவர் கடந்த 27-ந் தேதி இரவு தனது மனைவி மனோன் மணி என்பவரிடம் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் நடராஜன் கிடைக்காத நிலை யில் தண்டராம்பட்டுகாவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பரது விவசாய கிணற்றில் நடராஜன் பிணமாக மீட்கப்பட்டார். நடராஜனின் உடலில் வலது கால் பகுதியில் ரத்த காயங்கள் இருந்ததால் காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பக்கத்து நிலத்துக்காரரான ஏழுமலை என்பவர் தனது நிலத்தில் பயிரிட்டு இருந்த மணிலா, மரவள்ளி கிழங்கு, நெல் போன்ற பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார். இந்த மின்வேலியில் சிக்கி நடராஜன் இறந்தார்.

காவல்துறைக்கு தெரியாமல் இதனை மறைப்பதற்காக, கிணற்றில் பிணத்தை ஏழுமலை வீசியது தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் தண்டாம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News