தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: கலசப்பாக்கம் எம்எல்ஏ
தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கூறியுள்ளார்;
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு. சரவணன் முன்னிலையில் ஒன்றிய குழு தலைவர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர், இங்கு பேசிய ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்களுடைய ஊராட்சியில் செய்யவேண்டிய அனைத்து குறைகளையும் கூறினார்கள் அதை விரைவில் சரி செய்து கொடுக்கப்படும்.
இந்த தொகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தொகுதி மக்கள் என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.