பருவதமலை கோவிலில் திருட்டை தடுக்க 3 புதிய நவீன உண்டியல் அமைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை கோவிலில் திருட்டை தடுக்க 3 புதிய நவீன உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது.;
பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய ஊராட்சிக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சுமார் 4560 அடி உயரமுள்ள மூலிகை செடி கொடி மரங்கள் நிறைந்த பருவதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள சாமியை தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களிலும் திரளான பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்களின் காணிக்கை செலுத்தும் வகையாக கோவிலில் உண்டியல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி செல்கலும் சம்பவம் தொடந்து நடந்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய நவீன வகையில் உள்ளதாக உருவாக்கப்ப ட்டுள்ளது. 3 உண்டியல்கள் மலைமீது எடுத்து சென்று கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பக்தர்கள் கூறுகையில் அடர்ந்த காடுகள் மற்றும் மலை சுற்றி உள்ள தால் பக்தர்கள் மலை ஏறும் போது செல்போனில் தொடர்பு கொள்ள முடியாமல் தகவல் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுகிறது.
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்க முடியாத நிலையும் உள்ளது, எனவே பக்தர்களின் நலன்கருதி பருவத மலை அடிவாரத்தில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.