பருவதமலை சிவன் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல ஏற்பாடுகள்
சித்ரா பவுர்ணமியன்று பருவதமலை சிவனை வழிபட பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.;
பருவதமலை சிவனை வழிபட வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
பருவதமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தென்மகாதேவ மங்கலம் கிராமம் வழியாக தான் செல்ல வேண்டும். பக்தர்களின் நலன் கருதி ஊராட்சி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணியாளர்கள் 250 பேர் நேற்று மாதிமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பச்சையம்மன் கோவில் வரை சாலையின் இருபுறமும் உள்ள முட்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். பல்வேறு இடங்களில் குடிநீர் வசதியும், குப்பைகளை கொட்ட தற்காலிக குப்பை கொட்டும் இடமும் ஊராட்சி மன்றம் சார்பில் வைக்கப்பட்டது. தற்காலிக கழிவறை வசதிகள் , கிரிவலப்பாதை முழுவதும் தடையில்லா மின்சாரம் என பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் எழில்மாறன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் கலையரசி துரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.