கலசப்பாக்கம் நட்சத்திர கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

நட்சத்திர கோவிலில் பங்குனி உத்திர திருவிழா , கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-03-16 01:09 GMT

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் நட்சத்திர கோவிலில் எழுந்தருளும் ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சமேத வள்ளி தெய்வானை கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஸ்ரீ வள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சுயம்பு சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் மலர்மாலை அணிவித்து 31 அடி உயரமுள்ள கொடிமரம் அருகே எழுந்தருளி அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

வள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை மாலை எழுந்தருளி நட்சத்திர மழையை வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இத் திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி, கிழ்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News