ஜவ்வாது மலை படவேடு ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஜவ்வாது மலை மற்றும் படவேடு ஊராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

Update: 2024-09-09 02:40 GMT

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் நல திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள படவேடு ஊராட்சியில் ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், ஜவ்வாதுமலையில் துணை சுகாதார நிலையத்தையும் கலசபாக்கத்தில் உள்ள பத்தியவாடி மற்றும் நவாப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் 2 புதிய துணை சுகாதார நிலையங்களையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பி ரமணியன் , பேசியதாவது

தமிழகத்தில் சுகாதாரத் துறை மூலம் எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் தமிழக மக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அதில் தமிழக மக்களுக்காக மக்களை தேடி மருத்துவம் நடமாடும் மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்க அவர்களின் இல்லத்தை தேடி மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகிறார்கள். இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக கொண்டுவந்துள்ளார்.

அதேபோல் தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மருத்துவர் இல்லாததால் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் பணி நியமனம் செய்து மக்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அளித்து வருகிறார். என அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசுகையில்

இந்த கலசப்பாக்கம் தொகுதியில் மட்டுமே ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது கலசப்பாக்கம் தொகுதி கடந்த 20 ஆடுகளாக பின் தங்கிய தொகுதியாகவும் வளர்ச்சி பணிகள் சரியான முறையில் நடைபெறாமலும் இருந்து வந்தது.

தற்போது தமிழக முதல்வரும் நானும் சட்டமன்ற உறுப்பினர் சரவணனும் அதிக அக்கறை கொண்டு கலசப்பாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்கு எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வளர்ச்சி பணிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள பறவேடு பகுதி மலைப்பகுதி என்பதால் அந்தப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை இல்லாமல் இருந்தது தற்போது புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என் மீது கோபம் கொண்டாலும் பரவாயில்லை என்று கலசப்பாக்கம் தொகுதி பின்தங்கிய தொகுதி என்பதால் இந்த தொகுதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் நல திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், வருவாய் கோட்டாட்சியர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், தாசில்தார்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,மருத்துவர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News